சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

24 ஜனவரி, 2013

பௌத்தர்கள் ஐந்து திருமணங்களை செய்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்






பௌத்தர்களும் ஐந்து திருமணங்களை செய்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் கலபொட ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். ஒரே நாட்டில் இரண்டு இனங்களுக்கு வெவ்வேறு சட்டங்கள் இருக்க முடியாது. பெரும்பான்மை இனத்தை சிறுபான்மை இனமாக மாற்ற முஸ்லிம் சக்திகள் முயற்சிக்கின்றன. இந்த முயற்சிக்கு உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
முஸ்லிம்களுக்கு மூன்று நான்கு திருமணங்களை செய்து கொள்ள முடியுமாயின் அதே உரிமை பௌத்தர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அரேபிய தேசத்தைச் சேர்ந்த செல்வந்த வர்த்தகர்கள் பௌத்தர்களை மதம் மாற்றி வருகின்றனர். நாட்டின் உள்விவகாரங்களில் குழப்பங்களை ஏற்படுத்த எவருக்கும் அனுமதியளிக்கக் கூடாத என கலபட தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக