ஐரோப்பாவில் வெட்டுக்குத்துக்கு பிரசித்தி பெற்ற பிரான்ஸ் நாட்டில் இலங்கை தமிழர் ஒருவர் கண்டதுண்டங்களாக வெட்டப்பட்டு குப்பை தொட்டிக்குள் வீசப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த திங்கள் அதிகாலை 3மணி 30நிமிடம் அளவில் பிரான்ஸ் ivry sous seine என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெட்டி வீசிய நிலையில் பொலிசார் சடலத்தை மீட்டுள்ளார்கள். இவர் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் வடமாராட்சி பருத்தித்துறையை சேர்ந்த
கணபதிபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் புதல்வாரன 46 வயது நிரம்பிய சிவராசா என
அடையாளம் காணப்பட்டுள்ளார் .அவரது உடலில் 10 வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக
காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன
இக்கொலை நடந்த பகுதியில் உள்ள பெண் ஒருவரை
காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இப்பெண் ஏற்கனவே பல குற்றச்செயல்களில்
ஈடுபட்டவர்கள் என தெரியவருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக