சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

26 ஜனவரி, 2013

ருவெண்டா இனப்படுகொலைக் குற்றவாளி பிரான்சில் கைது!!!



ருவெண்டாவில் (Rwanda) நடாத்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றங்களுக்காகச் சர்வதேசக்  காவற்துறையினரால் (INTERPOL) தேடப்பட்ட Innocent Musabyimana பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். 

40 வயதுடைய Innocent Musabyimana இற்கு ருவெண்டா கைதாணை பிறப்பித்தயைடுத்து சர்வதேசக் காவற்துறையின் தேடுதற் பட்டியலிலும் இவர் இணைக்கப்பட்டிருந்தார். இவர் Dijon இலுள்ள Burgundy இல் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். 
 இவர் எப்படி பிரான்சிற்குள் வந்தார், எவ்வளவு காலமாக இங்கு உள்ளார் என்பது பற்றிய விபரங்களைப் பிரான்ஸ் காவற்துறையினர் தெரிவிக்கவில்லை. ஆனாலும் ஒரு விநியோக வாகனம் ஒன்றைச் செலுத்துவதற்கான பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இவர் ருவெண்டா நீதித்துறையால் தேடப்படுபவர் என்பதைக் காவற்துறையினர் உறுதி செய்துள்ளனர். 

 இவர் 1994இல்  அங்கு நடந்த இனங்களுக்கிடையிலான மோதலில் பாலியல் வல்லுறவு, படுகொலைகள், மற்றும் இனப்படுகாலையில் ஈடுப்டடதாக ருவெண்டா நீதித்துறையால் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளார். Kigali யிலுள்ள அரசதரப்பு வக்கீல்கள் கைது செய்யப்பட்ட Innocent Musabyimana இனை நாடுகடத்தி ருவெண்டா நீதித்துறையினரிடம் வழங்கும் படி கோரியுள்ளனர். இதற்கான முடிவை Dijon நீதிபதி எதிர்வரும் 30ம் திகதி வழங்குவார். 
 இங்கு ருவெண்டா அரசிற்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டால் பிரான்சின் பிரதமர் ஜோன் மார்க் ஐரோல் நாடுகடத்தலுக்கான உத்தரவில் கையெழுத்திட்டு ருவெண்டாவில் Innocent Musabyimana சட்டவிசாரணையை எதிர் கொள்ள அனுப்பப்படுவார்.  ருவெண்டா இனப் படுகொலையில் எட்டு இலட்சம் டுட்சு இன மக்கள் கொன்றொழிக்ப்பட்டனர் என ஐ.நா வே தெரிவித்துள்ளது





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக