சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

21 ஜனவரி, 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதப்பிள்ளை எமது விடங்களில் தலையிட கூடாது: இ.அரசு


 
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தலையீடு செய்யக் கூடாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க பதவி விலக்கப்பட்டமை மற்றும் புதிய பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டமை தொடர்பில் போதிய தெளிவின்றி கருத்து வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் நாட்டின் அரசியலமைப்பு தொடர்பில் தெளிவின்றி இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏதெனும் ஒரு பக்கச்சார்பாக கருத்து வெளியிடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

எந்தவித விசாரணைகளும் இன்றி நவநீதம்பிள்ளையும், அவரது அலுவலக அதிகாரிகளும் இலங்கை நிலைமைகள் குறித்து பக்கச்சார்பான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

எனவே இவ்வாறான செயற்பாடுகளினால் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்படக் கூடுமென வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக