சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

21 ஜனவரி, 2013

யாழ். திருநெல்வேலியில்; தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் மீட்பு.


news



தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் யாழில் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவர் அவரது வீட்டிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 10:00 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி காலாசாலை வீதியை சேர்ந்த 19 வயதுடைய சோமசுந்தரம் தர்மிளா என்பவரே இவ்வாறு தூக்கி தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது வீட்டிலுள்ளோர் அயலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போது தனியே இருந்த குறித்த பெண் வீட்டின் கூரையில் சேலையில் சுருக்கிட்டு தூக்கில் தொங்கியுள்ளார்.

எனினும் இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இது தற்கொலையா அல்லது கொலையா என்பது பற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக