சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

23 ஜனவரி, 2013

CA பரீட்சையில் தேசிய அளவில் முதலிடத்தை பிடித்தார் ஆட்டோ ஓட்டுனரின் மகள்!

தமிழகத்திலிருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்த ஆட்டோ ஓட்டுனரின் மகள் தேசிய அளவில் நடைபெற்ற Chartered Accountancy (CA) தேர்வில் முதல் பயிற்சியிலேயே முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
 தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார் பெருமாள், 25 ஆண்டுகளுக்கு முன்னர் மும்பைக்கு இடம்பெயர்ந்தார். அங்கு ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி தனது இரு பிள்ளைகளையும் படிக்க வைத்துள்ளார்.

அவர்கள் இருவருமே கல்வியை தவிர வேறெதிலும் நாட்டமின்றி, கடுமையான முயற்சி, பயிற்சி கொண்டு Chartered Accountancy தேர்வில் சித்தி பெற்றுள்ளனர். குறிப்பாக அவர்களது மகள் பிரேமா ஜெயக்குமார், இப்பரீட்சையில் தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார். மலாட் பகுதியில் 280 சதுர அடி இருக்கும் இடத்தில் வாழும் இந்த ஏழைக் குடும்பத்தினருக்கு பிரேமாவின் சாதனை வெற்றி வளமான ஒரு எதிர்கால வாழ்வை ஏற்படுத்தி தர போகிறது.

தனது பரீட்சை முடிவுகள் குறித்து பிரேமலதா கூறுகையில், 'நான் கண்டிப்பாக தேர்வில் வெற்றி பெறுவேன் என எனக்கு தெரியும், ஆனால் தேசிய அளவில் முதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு கூடுதல் உற்ச்சாகத்தை அளித்துள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் என் குடும்பத்தினரின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவேன். என் பெற்றோரின் ஆசி இல்லாமல் இந்த வெற்றி கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தி வந்தனர். எனக்காக இவ்வளவு தூர பாடுபட்ட அவர்களை இனி வசதியாக வாழ வைக்க விரும்புகிறேன். என் தந்தையும், தாயையும் நினைத்து பெருமைப்படுகிறேன். அவர்கள் எனது மற்றும் என் தம்பியின் படிப்புக்கு பணம் ஒரு தடையாக இருக்கும் நிலையை எப்போதும் ஏற்படுத்தியதில்லை. என்னுடன் சேர்ந்து எனது தம்பியும் இத்தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெற்றிப்பது பெருமையாக உள்ளது' என தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் தேசிய அளவில் நடைபெற்ற குறித்த சாட்டட் அக்கவுண்டன் தேர்வில், 800 க்கு 607 மதிப்பெண்களை பிரேமா ஜெயக்குமார் பெற்றுள்ளார்.
முன்னதாக மும்பை பல்கலைக்க்ழகம் நடத்திய பி.காம் மூன்றாம் ஆண்டு தேர்வில் பிரேமா 90% வீத மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார்.

பலருக்கும் முன்மாதிரியாக திகழும் பிரேமலதாவிற்கு, 5 லட்சம் உதவி தொகையாக வழங்கப்படுமென கப்பல் துறை அமைச்சர் ஜி கே வாசனும், பிரேமாவின் சாதனையை பாராட்டி 1 லட்ச ரூபாய் வழங்கப்படும் என தி மு க தலைவர் கருணாநிதியும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக