சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

24 ஜனவரி, 2013

இராணுவத்தில் இணைய தமிழர்களுக்கு தடை இல்லை: இராணுவ தளபதி

 news இலங்கை இராணுவத்தில் இணைந்துகொள்வதற்கு தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு தடை இல்லை என இராணுவத்தளபதி  தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் இலங்கை இராணுவத்தில் இணைந்து கொள்வதற்கு அவர்களுக்கு தடை இல்லை. அதற்கு தகுதியுள்ளவர்களுக்கு எப்பொழுதும் வாசற்கதவு திறந்தே உள்ளது என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இராணுவ தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் இராணுவத்துக்கு இணையக்கூடிய தகுதிகள் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளைக்  கண்டறிந்து அவர்களை இணைத்துக்கொள்ளுமாறும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த நவம்பர் மாதம் 109 தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைக்கப்பட்டனர். இவர்களது இணைவு உறுதி செய்யப்பட்டதற்காக அவர்களின் பெற்றோரிடம் அவர்களது நியமனக்கடிதங்களும் வழங்கப்பட்டன.

அத்துடன் இவ்வாறு இராணுவத்தில் இணைக்கப்பட்ட பெண்கள் மனநோய்க்கு உள்ளாகியுள்ளதாக சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

   பழைய  இடுக்கை.........


 இலங்கை இராணுவம் அரைவாசிபலத்தை இழந்துள்ளது ? (அதிர்ச்சித் தகவல்)
விடுதலைப் புலிகளோடு முதல் கட்ட போர் ஆரம்பித்தவேளை, இலங்கை இராணுவத்தில் சுமார் 1லட்சத்தி 90,000 ஆயிரம் பேர் இருந்தார்கள். இருப்பினும் பின்னர் கோட்டபாயவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மேலும் 1 லட்சம் இளைஞர்களை இலங்கை அரசு தமது படையின் இணைத்தது. மேலும் 10,000 பேரை கடற்படையிலும் வான் படையிலும் இணைத்தது இலங்கை அரசு. ஒரு காலகட்டத்தில் முப்படைகளையும் சேர்த்து சுமார் 3 லட்சம் படையினர் இலங்கையில் இருந்தார்கள்.

2009 ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தபின்னர், இராணுவத்தில் இருந்து பல இளைஞர்கள் வெளியேறி இத்தாலி, அவுஸ்திரேலியா, மற்றும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்பை தேடிச் சென்றுவிட்டனர். 2010ம் ஆண்டில் சுமார் 20,000 ஆயிரம் பேர் இராணுவத்தை விட்டு விலகியதாகச் சொல்லப்பட்டது. பின்னர் 2011ல் 27,000 பேர் விலகியுள்ளார்கள்.




இது இவ்வாறு இருக்கையில், போன வருடம் மாத்திரம் சுமார் 71,000 இளைஞர்கள் படையில் இருந்து விலகியுள்ளார்கள். இதில் 30,000 பேர், முறையாக விலகியுள்ளார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேபோல 2010 மற்றும் 2011ல் சொல்லாமல் ஓடித் தப்பிய இராணுவம் எவ்வளவு என்ற விடையம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. கடந்த மூன்று வருடங்களையும் கூட்டிப் பார்த்தால், ஆக மொத்தத்தில், ஒரு லட்சத்தி 18,000 ஆயிரம் பேர் இதுவரை விலகியுள்ளார்கள் என்பது உத்தியோகபூர்வ அறிக்கையாகும். அப்படி என்றால் இராணுவத்தில் இருந்து சொல்லாமல் ஓடித் தப்பியவர்களையும் சேர்த்து கூட்டினால், இலங்கை இராணுவத்தின் பலம் சரியாக அரைவாசி குறைந்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக