சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

1 பிப்ரவரி, 2013

”இலங்கையின் தலைவிதி மீண்டும் இந்தியாவின் கையில்”





ஜெனிவாவிலும், கொமன்வெல்த் விவகாரத்திலும் இந்தியாவின் பங்கு சிறிலங்காவுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

“கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக்குழு, கொமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாடு, வரப்போகும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் ஆகியவற்றில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.
மார்ச் மாதம் ஜெனிவாவில் மற்றொரு தீர்மானம் – கடுமையான தொனியில் கொண்டு வரப்படவுள்ளது. இதில் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானதாக இருக்கும்.
கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு அமைய ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர், ஜெனிவா கூட்டத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்பது தெளிவானது.
தலைமைநீதியரசர் விவகாரமும் யாழ்ப்பாண நிலைமையும் அதில் உள்ளடக்கப்படலாம்.
சிறிலங்கா நிலைமைகள் குறித்து கொமன்வெல்த் கவலையடைந்துள்ளது.
இந்தநிலையில் கொமன்வெல்த் மாநாட்டை வேறுநாட்டுக்கு மாற்ற வேண்டும் என்றும், கொமன்வெல்த்தில் இருந்து சிறிலங்காவை நீக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரத்திலும் இந்தியா தீர்க்கமான பங்கை வகிக்கும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக