சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

1 பிப்ரவரி, 2013

யாழ் பல்கலை. மாணவர்களை விடுவிக்கக் கோரி சென்னை இலங்கைத் தூதரகம் முற்றுகை; எழுபதுக்கும் மேற்பட்டோர் கைது


கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணக் பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்கக்கோரி சென்னையில் இலங்கைத் தூதரகம் முன்னால் முற்றுகைப் போராட்டம் நடத்திய 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 


கடந்த நவம்பர் 27ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர் தினம் அனுஷ்டித்தனர். அவர்களைக் கைது செய்து சித்திவதை செய்து சிறைவைத்துள்ளது இலங்கை அரசு. 
அந்த மாணவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கோரியே நேற்றுமுன்தினம் காலையில் சென்னையில் இலங்கைத் தூதரகம் முற்றுகையிடப்பட்டது. போர்க்குற்றம்  இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பினர் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.திருமலை ஒருங்கிணைத்தார்.
வீதியை மறித்து மறியலில் அமர்ந்த போராட்டக் குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பொலிஸார் அவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். 
அப்போது முறுகல் நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 70க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, பொலிஸாரின் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக