சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

1 பிப்ரவரி, 2013

இலங்கை நல்லிணக்கத்தை எட்டுவதற்கு இதயசுத்தி அவசியம் - பிரித்தானியா!



ல்லிணக்கம் என்பது வெறும் வார்த்தையாலோ அல்லது உடன்டிக்கைளினாலோ மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றல்ல. அது இதயசுத்தியுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று' என இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் தெற்காசிய நாடுகளுக்கான வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டர் பேர்ட் தெரிவித்தார். இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரிட்டிஸ் மகாராணியாரின் வருகை குறித்து இதுவரை தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். முல்லைத்தீவு, கேப்பாபிளவு பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள மக்களின் நிலவரங்கள் குறித்து பார்வையிடுவதற்காக வந்திருந்த வெளிவிவகார அமைச்சர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பிரிட்டிஸ் மகாராணியார் மற்றும் பிரிட்டிஸ் பிரதமர் ஆகியோர் கலந்துகொள்வது பற்றி பிரிட்டன் எதுவித தீர்மானத்தையும் இதுவரை எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.   
இருந்த போதும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாதது எந்த வகையிலும் பாதகத்தை ஏற்படுத்தப் போவதில்லை என்று தான் நம்புவதாகவும் இந்த பொதுநலவாய மாநாட்டில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். யுத்தத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேம்பாடுகள், நல்லிணக்க நடவடிக்கைகளுடன் ஒத்து போகின்றதா என்பது குறித்து ஆராய்வற்காகவே இங்கு தான் வருகை தந்தததாகவும் அவர் தெரிவித்தார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக