துருக்கியின் தலைநகரான அங்காறாவிலுள்ள அமெரிக்க தூதரகமானது தகர்க்கப்பட்டுள்ளதாகத் தற்போதய தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கியைச் சேர்ந்த ஊடகங்கள் இது ஒரு தற்கொலைக் குண்டுதாரி மூலம் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என கருதுகின்றன.
இத்தாக்குதல் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. இத் தாக்குதலில் ஆகக்
குறைந்தது ஒருவர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகினறது. இத்
தாக்குதலானது அமெரிக்கத் தூதரகத்தின் நுழைவாயிலில் நடைபெற்றுள்ளதென
தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக