சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

1 பிப்ரவரி, 2013

விமல்வீரவம்சவுக்கு ஆங்கிலத்தில் உரையாடுமாறு விக்ரமபாகு கருணாரட்ண உத்தரவு



 
 
 
 
 
 
இலங்கை வந்துள்ள அமெரிக்க குழு தொடர்பில் அரசியல் அரங்கில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராந்து பார்ப்பதற்கே அவர்கள் இலங்கை வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 15 ஆம் திகதி ஜெனிவாவில் இடம்பெறவுள்ள யுத்த குற்ற விசாரணைகளுக்கு ஆதாரம் திரட்டுவதற்கே இவர்கள் இலங்கை வந்துள்ளனர்.

எவ்வாறாயிலும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ண, அமெரிக்கா தொடர்பில் விமல் வீரவன்ச, தமது கருத்தை ஆங்கிலத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கா தம்மை ஏமாற்றுவதாக விமல் வீரவன்ச கூறுகின்றார். ஆனால் அதனை சிங்களத்தில் கூறுகிறார்.
அமெரிக்கா பற்றி எதனைக் கூறவேண்டுமானாலும் விமல் வீரவம்ச ஆங்கிலத்தில் கூறவேண்டும், இவ்வாறு சிங்களத்தில் கூறுவதால் அவர்களுக்கு எதுவுமே தெளிவாகாது எனவே ஆங்கிலத்தில் கூறினால் இன்னமும் சிறப்பாக இருக்கும் என விக்ரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக