சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

1 பிப்ரவரி, 2013

கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் அவர்களால் “தமிழ் மரவுத் திங்கள்“ தொடர்பான சட்டம் அறிமுகம்

(காணொளி இணைப்பு)

நெற்று 31 ம் திகதி, தை மாதத்தினை தமிழ் மரவுத் திங்களாக நாடனாவிய ரீதியில் பிரகடனப்படுத்துவத்குரிய சட்டமூலம் முதற் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் அவர்களால் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டது“கனடாவில் இன்று நாடாளாவிய ரீதியில் தமிழர்கள் சமூகம், கலாசாரம், பொருளாதாரம், அரசியல் எனப்பல்வேறு துறைகளிலும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவர்களுடைய அடைவுகளையும், சமூக ஈடுபாட்டையும் கொண்டாடுவதற்குரிய நல்லதொரு வாய்ப்பாக இது அமையும்” எனவும் அவரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தை மாதம் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானதொரு மாதமாகும், தமிழர் புத்தாண்டான தைப்பொங்கலுக்குரிய மாதம் இதுவாகும். எனவே இந்தச் சட்டம் மூலமானது, தை மாதத்தினை நாடளவிய ரீதியில் தமிழர் மரவுகளை அனுஷ்டிப்பதட்குரிய அங்கீகாரமாக அமையும்” எனவும் அவரால் குறிப்பிடப்பட்டது.
நான் இந்தச் சட்டமூலத்தை சம்ர்ப்பிப்பதையிட்டு பெருமையடைகிறேன், மேலும் இந்த அங்கீகாரமானது தமிழர் மரபுகளை கௌரவப்படுத்தவதோடு இங்குள்ள தமிழ்க் கனேடியர்களுக்கிடையிவ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாதமாகவும் அமையும்” எனவும் கூறப்பட்டது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக