சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

19 ஜூலை, 2013

வட மாகாணசபைத் தேர்தலுக்காக கண்காணிப்பாளர்களை அனுப்பாதாம் ஐரோப்பிய ஒன்றியம்


எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலுக்கு, கண்காணிப்பாளர்களை அனுப்ப முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய குழுவின் தலைவரான ஜீன் லம்பேர்ட் நேற்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போது இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் பிரதான் தேர்தலுக்கு மட்டுமே கண்காணிப்பாளர்களை அனுப்புவது வழக்கம்.  எனினும், வட மாகாண சபைத் தேர்தலுக்கு கண்காணிப்பாளர்களை அனுப்புவதற்கோ அல்லது அவற்றைத் தயார் படுத்துவதற்கோ போதிய கால அவகாசம் இல்லை. 

இத்தேர்தல் மூலம் இனங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

வடக்கிற்கு மேற்கொண்ட விஜயத்திற்போது, யுத்தத்திற்குப் பின்னர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் நிலுவையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக