பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் எனக்கூறி தொலைபேசியில்
அச்சுறுத்தி பணம் பறித்து வந்த சந்தேக நபர் ஒருவர் கொழும்பு
குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை பாலத்திற்கு அருகில் வைத்து குறித்த சந்தேக நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டே ஜயவர்த்தனபுர மாவத்தையில் உள்ள ஓய்வு பெற்ற பெண் வைத்தியர்
ஒருவரின் மகனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரைப் புலி உறுப்பினர் என
அச்சுறுத்தி குறித்த போலி பொலிஸ் பரிசோதகர் 70 ஆயிரம் ரூபா பணம்
பறித்துள்ளார்.
அத்துடன் கறுவாத்தோட்டம் பான்ஸ் பிரதேச நபரொருவரிடமும் இவ்வாறு தொலைபேசியில் அச்சுறுத்தி பணம் பறிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு முறைப்பாடு
செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி சந்தேக நபரை கைது
செய்துள்ள கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அவரிடம் இருந்து கார்
மற்றும் விசா அட்டைகள் என்பவற்றை மீட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக