சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

4 ஜூலை, 2013

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் இரா சம்மந்தன் பேச்சு!

இந்திய உயர்ஸ்தானிகர் இரா சம்மந்தன் பேச்சு!


தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளது.  
இந்த இந்த பேச்சுக்களின்போது 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும், அதனை தடுத்து நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹாவிடம் விளக்கி கூறியுள்ளார்.
13வது திருத்தச்சட்ட விவகாரம் பற்றி ஆராய்வதற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் எதிர்வரும் 7ம் திகதி இலங்கை செல்ல உள்ளார்.
அதேவளை இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று புதுடெல்லிக்கு விஜயம் செய்கிறார்.
பசில் ராஜபக்ஷவின் விஜயத்தை முன்னிட்டு இந்திய தூதுவர் வை.கே. சிங்ஹாவும் இன்று புதுடில்லி பயணமாகின்றார்.
இந்த நிலையிலேயே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய உயர்ஸ்தானிகரை நேற்று முன்தினம் சந்தித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக