சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

1 ஆகஸ்ட், 2013

இறைவன் அமைதியே வடிவானவர். ஆலயங்களில் ஒலிபெருக்கிகள் வேண்டாம் - இந்து மகாசபையின் கோரிக்கை.



க.பொ.த. உயர்தர மாணவர்களும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும் பரீட்சைகளுக்காக தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆலயங்கள் தமது ஒலிபெருக்கி பாவனையை குறைத்துக்கொள்ளுமாறு இந்து மகா சபை வேண்டிக்கொள்கிறது
யாழ்.மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் ஒலிபெருக்கிப் பாவனையைக் குறைத்துக்கொள்ளுமாறு இந்து மகா சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இறைவன் அமைதியே வடிவானவர்.  அமைதியான சூழலில் வழிபாடாற்றினாலே இறை அருளை முழுமையாகப் பெற்றுக்கொள்ள முடியும்.அதை விடுத்து திருவிழாக் காலங்களிலும் ஏனைய தினங்களிலும் ஆலயச் சுற்றாடல் எங்கும் ஒலிபெருக்கிகளைக் கட்டி அவற்றை அதிக சத்தத்துடன் ஒலிக்க வைப்பதானது பக்தர்களின் அமைதியான இறை வழிபாட்டுக்கு குந்தகம் விளைவிக்கின்றது.
அத்துடன் அந்தச் சுற்றாடலில் வசிக்கும் மக்களுக்கும் பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்தும் என்றும் இந்து மகா சபை தெரிவித்துள்ளளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக