சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

2 ஆகஸ்ட், 2013

நாடாளுமன்ற ஓய்வூதியத்துக்காக தேர்தலில் போட்டியிடாத விஜயகலா!




எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் மனைவி விஜயகலா எம். பி போட்டியிட இருந்தார்.
ஆயினும் நாடாளுமன்ற பதவிக் காலத்தை தொடர்ச்சியாகவும், முழுமையாகவும் பூர்த்தி செய்கின்ற பட்சத்தில் ஓய்வூதியம் கிடைக்கப் பெறும் என்பதால் பின் வாங்கிக் கொண்டார்.
இருப்பினும் இவரது ஆசியுடன் மகேஸ்வரனின் சகோதரர்கள் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் துவாரகேஸ்வரன் முதன்மை வேட்பாளர். 
ஐ. தே. கவில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் விபரம் வருமாறு:-
தி. துவாரகேஸ்வரன், என். சதானந்தன், பி. கனகரஞ்சிதன், எஸ்.பரமசிவம், எஸ். தியாகேந்திரன், கே. தர்சன்சர்மா, சி.அகலாவியன், பு. கஜன், வி.தயாபரன், எ. இயஸ், வி.கணேசபிள்ளை, சி.கபிலராஜ், எ.சிவசங்கர், எஸ்.அச்சுதன், எஸ். சசிகுமார், பி.தேவசீலன், வை.துஸ்யந்தன், ஆர்.நாகேந்திரராஜா, கே.தனுஸ்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக