சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

12 செப்டம்பர், 2013

இன்று சர்வதேசத்தின் அவதானம் எங்கள் பக்கம் திரும்பியிருக்கும் அறவழி, ஆயுத போராட்டத்தில் கற்றுக்கொண்ட பாடத்தினையும் வைத்து தற்போது இராஜதந்திர போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம் .

 
கடந்த காலத்தில் அற வழியில் கற்றுக்கொண்ட பாடத்தினையும் ஆயுத போராட்டத்தில் கற்றுக்கொண்ட பாடத்தினையும் வைத்து தற்போது இராஜதந்திர போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம் . அதற்குதான் தற்போது காலம் கனிந்திருக்கின்றது
என்பதனை மறந்துவிடக்கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார் .
 
வவுனியா தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வடமாகாண சபை தேர்தல் தொடர்பான பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
 
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்
 
இன்று சர்வதேசத்தின் அவதானம் எங்கள் பக்கம் திரும்பியிருக்கும் சந்தர்ப்பத்திலே அவ் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் .
தற்போது வெண்ணை திரண்டு வருகின்றது . ஆகவே நாம் தாழியை உடைத்து விடக்கூடாது . ஏனெனில் சர்வதேசம் தற்போது தமது கவனப்பட்டியலில் இலங்கையின் இனப்பிரச்சினையையும் தமிழர் பிரச்சினையையும் உள்ளடக்கி கவனித்துக்கொண்டுதான் உள்ளது .
ஆனால் சர்வதேச சமூகத்திற்கு எங்கள் பிரச்சினை மாத்திரம் ஒரு பிரச்சினையல்ல . தற்போது சிரியாவை நோக்கி அமெரிக்க படையணி செல்கின்றது . அத்துடன் ஆப்கானிஸ்தான் பிரச்சினை ஈராக் பிரச்சினை என்று பல்தரப்பட்ட பிரச்சினை உள்ளது .
தமிழர்களுக்கு எமது பிரச்சினைதான் முதன்மைப் பிரச்சினை . ஆனால் உலகிற்கு அப்படியல்ல . எனவே தற்போது அவதானம் எங்கள் பக்கம் திரும்பியிருக்கும் சந்தர்ப்பத்தில் நாங்கள் அதனை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் . இந்த சர்வதேசத்தின் பார்வை எங்கள் பக்கம் திரும்பியுள்ளது என்பதற்கான கடைசி சமிக்ஞைதான் நவநீதம்பிள்ளை அம்மையாரின் வருகை .
ஆகவே வடமாகாணசபைத் தேர்தலில் அமோகமாக வாக்களித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பை வெற்றி பெறச்செய்வதன் ஊடாக சம்பந்தனின் கரத்தையோ மனோ கணேசனின் கரத்தையோ பலப்படுத்துவதென்று எண்ணாது நவநீத அம்மையாரின் கருத்தை பலப்படுத்துங்கள் என கூறிக்கொள்கின்றேன் .
 
சர்வதேச சமூகம் எதையும் செய்யாது அமைதியாக இருக்கும் . எமது மக்கள் இறுதி யுத்தத்தில் கொல்லப்படும்போது கண்மூடி பார்த்துக்கொண்டிருந்தார்கள் . கொலைகார அரசுக்கு துணை நின்றார்கள் என்று எல்லாம் சொன்னார்கள் . உண் - மைதான் . இந்திய அரசு துணை சென்றது . அமெரிக்கா துணை சென்றது . ஐ.நா. வாய் மூடி பார்த்துக்கொண்டிருந்தது . ஆகவே சர்வதேச சமூகத்தை நம்பக்கூடாது என சிலர் சொல்வார்கள் . ஆனால் சர்வதேச சமூகத்தை நாம் நம்பாமல் இருக்க முடியாது .
 
அவ்வாறான நிலையில் ஒபாமாவும் மன்மோகன் சிங்கும் நவநீதம்பிள்ளையும் பான்கீமூனும் தங்கத்தட்டில் எமது விடுதலையை கொண்டு வந்து தருவார்கள் என்று சொன்னால் அதனை நம்பவும் தயாராக இல்லை .
ஆகவே நாம் எமது தாயக பிரதேசத்தில் மக்கள் மத்தியில் ஜனநாயக போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் . அப்போதுதான் சர்வதேச சமூகம் அதற்கு துணையாக வந்துகொண்டிருக்கும் . ஆகவே நாம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றி விடக்கூடாது .
இந்த தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடுவது என்பது வெறும் ஆட்சியை பிடிப்பதற்காகவோ விக்னேஸ்வரனை அரசியலுக்கு கொண்டு வருவதற்காகவோ அல்லது வைத்தியகலாநிதி ப . சத்தியலிங்கத்தையோ ரதனையோ வெற்றிபெற செய்ய வேண்டும் என்பதற்காகவோ அல்ல . மக்கள் ஆணையை பெற்றுக்காட்ட வேண்டும் என்பதற்காகவே இத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடுகின்றது .
 
எமக்கு மாகாணசபை தீர்வல்ல என்பதனை பல தடவை கூறிவிட்டோம் . மாகாணசபை என்பது வெற்றுப்பாத்திரம் . ஆனால் அங்கு ஓர் கட்டமைப்பு உள்ளது . அவ்வாறான கட்டமைப்பு உள்ள மாகாணசபையில் தமிழர் தரப்பை பிரதிபலித்து அமையும் ஆட்சியில் அலசி ஆராயப்பட்டு எடுக்கப்படும் தீர்மானங்கள் உலக ஏற்புடையதாக மாறும் . எனவே தான் நாம் வட மாகாண சபையை பெரும்பான்மையுடன் வெற்றி கொள்ள வேண்டும் என கூறுகின்றோம் .
 
உதாரணமாக இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும் போது தமிழகத்தில் ஜெயலலிதாவினால் சட்டசபையில் எடுக்கப்பட்ட தீர்மனங்கள் மன்மோகன் சிங் அரசால் நிராகரிக்க முடியாது இருந்தது . உலகமும் உதாசீனமாக எடுத்துக்கொள்ள முடியாது . அவ்வாறான சட்டசபை போன்ற அமைப்புத்தான் மாகாணசபை அரசு என்பது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக