சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

18 நவம்பர், 2013

இலங்கையின் மனித உரிமை குறித்து பேச கமரூனிற்கு தகுதியில்லை; என்கிறார் சம்பிக்க றணவக்க

பொதுநலவாய நாடுகளின் மாநாடு இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் இடமல்ல அது பலதரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் இடம் எனவே பிரித்தானிய பிரதமர் இலங்கைக்கு வந்து செருக்கான விதமாக செயற்பட்டமை கண்டிக்கத்தக்கது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். 

பிரதமர் டேவிட் கமரூன் நேற்று ஊடகவியலாளர்
சந்திப்பொன்றை நடத்தி எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னதாக மனித உரிமை மீறல்கள் மீதான விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார். எனினும் அவருக்கு அப்படி கூறுவதற்கான உரிமையில்லை. அத்துடன் யாழ்ப்பாணத்திற்கு செல்லவும் ஊடக சந்திப்புகளை நடத்தவும் அவருக்கு உரிமையில்லை. பிரித்தானிய பிரதமர் 1700 ஆண்டுகளில் போல் ஏகாதிபத்திய மனநிலையை காட்டினார். அத்துடன் 1818 ஆம் ஆண்டு ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் பற்றி அவர் என்ன கூறபோகிறார்? பிரித்தானியாவில் 12 ஆயிரம் யானைகள் இருந்தன. கமரூனின் உறவினர்கள் அதனை 400 ஆக குறைத்தனர். இன்று அவர் எமக்கு இங்கு வந்து சமத்துவம் பற்றி போதிக்க பார்க்கின்றார். இலங்கை சிறிய நாடு என்பதால் கமரூன் சண்டித்தனம் காட்ட வருகிறார். அங்கிருப்பது நிலப்பிரபுத்துவ கொள்கை கொண்ட ராணி. சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் இலங்கை வருவதற்கு இடமளித்ததும் தவறு. சனல் 4 தொலைக்காட்சி ஒப்பந்தம் ஒன்றையே நிறைவேற்றி வருகிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக