முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில்
பெளத்த பிக்கு ஒருவரின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள விகாரை
அமைந்துள்ள ஆதனத்தின் உரிமையாளர் தனது ஆதனத்திற்குரிய அறுதி
உறுதியை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட
அறிக்கையிடலாளர் சலோகா பெயானியிடம் காண்பித்து தனது ஆதனத்தை
மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அது அறுதியுறுதியா என வினாவிய ஐ.நா. பிரதிநிதி அந்த உறுதியின் நகல் பிரதி ஒன்றினையும்
பெற்றுச் சென்றுள்ளார். நேற்றுப் பிற்பகல் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட அறிக்கையிடலாளர் பிரதிநிதி முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்ற பொழுது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
அது அறுதியுறுதியா என வினாவிய ஐ.நா. பிரதிநிதி அந்த உறுதியின் நகல் பிரதி ஒன்றினையும்
பெற்றுச் சென்றுள்ளார். நேற்றுப் பிற்பகல் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட அறிக்கையிடலாளர் பிரதிநிதி முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்ற பொழுது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஐக்கிய நாடுகள்
சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட அறிக்கையிடலாளர் சலோகா
பெயானி நேற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்து
முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்களைச் சந்தித்துக்
கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பின் போது அண்மையில் வெள்ளாம்
முள்ளிவாய்க்கால் பகுதியில் பௌத்த பிக்கு ஒருவருடைய ஏற்பாட்டில்
அமைக்கப்பட்டுள்ள விகாரை அமைந்துள்ள ஆதனத்தின் உரிமையாளர்
கலந்துகொண்டு தனது ஆதனத்தினை மீட்டுத்தருமாறு ஐ.நா.
பிரதிநிதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்பொழுது குறித்த நபர் தனது ஆதனத்தின் உறுதியையும் ஐ.நா.
பிரதிநிதியிடம் காண்பித்துள்ளார். இவ்விடயத்தினை
கருத்திலெடுத்த ஐ.நா. பிரதிநிதி குறித்த நபரிடம் நீங்கள்
காண்பிக்கின்ற இந்த ஆவணம் உங்களுடைய காணியின் உறுதியா? எனக்
கேட்டுள்ளார். அதற்கு அவர் அது தனது காணியின் அறுதியுறுதி எனக்
காட்டியுள்ளார். அந்த உறுதியின் நகல் பிரதி ஒன்றினையும் ஐ.நா. பிரதிநிதி
கோரிப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக