சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

6 டிசம்பர், 2013

மாகாணசபையின் எதிர்கட்சித்தலைவர் கமலேந்திரன் ஈ.பி.டி.பியிலிருந்து இடைநிறுத்தம்.

 
வடக்கு மாகாணசபையின் எதிர்கட்சித்தலைவரும் யாழ் . மாவட்ட அமைப்பாளரமான கந்தசாமி
கமலேந்திரன் ஈ.பி.டி. பியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சி . தவராசா அறிவித்துள்ளார் .
                           
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் ,

எமது கட்சியின் மூத்த உறுப்பினரும் , நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவருமாகிய டானியல் றெக்சியன் படுகொலை செய்யப்பட்டிருப்பதனை மருத்துவமனை ஆதாரங்களை வைத்து நீதிமன்ற விசாரணைகள் நடந்துவருகின்றன .
ஈவிரக்கமற்ற இப்படுகொலை குறித்து சந்தேகத்தின் பேரில் எமது கட்சியின் உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரன் ; கைதாகி நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார் . நீதிமன்ற விசாரணையில் இருக்கும் இவ்விடயம் குறித்து நாம் தற்போது எவ்வித கருத்துக்களும் கூற முடியாது .
ஆனாலும் , இது குறித்து எமது மக்களுக்கு நாம் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும் . வன்முறைகள் , அச்சுறுத்தல்கள் , மற்றும் படுகொலைகள் போன்ற ஜனநாயக விரோத செயற்பாடுகளால் எமது மக்கள் கடந்த காலங்களில் பேரவலங்களையே சந்தித்து வந்திருக்கின்றார்கள் .
இது போன்ற படுகொலை சம்பவங்களை எமது கட்சியின் தலைமை ஒருபோதும் அனுமதித்திருந்ததும் இல்லை . நியாயப்படுத்தியிருந்ததும் இல்லை . கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் எந்தகட்சிக்குள்ளும் இல்லாமல் இல்லை . ஆனாலும் அப்படியான முரண்பாடுகள் கட்சியின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டே தீர்க்கப்படல் வேண்டும் .
டானியல் றெக்சியன் படுகொலையானது தனிப்பட்ட முரண்பாடுகளின் காரணமாகவே நடந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது .
டானியல் றெக்சியன் படுகொலை குறித்த கொலையாளிகள் யார் என்பது தொடர்பாக நீதிமன்ற விசாரணைகள் ஒழிந்து தீர்ப்புவழங்கப்படும் வரை எமதுகட்சியின் உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரன் அவர்களை கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து இடைநிறுத்தி வைக்க கட்சியின் தலைமைப்பீடம் தீர்மானித்திருக்கிறது .
எமது கட்சியின் கட்டுப்பாட்டு விதிகளில் இருந்துமீறுவோர் எவராயினும் கட்சியில் இருந்து நிரந்தரமாகவே விலக்கப்படுவார்கள் என்பதையும் , சமூக விரோத செயல்களை யார் செய்தாலும் அவர்கள் பாகுபாடின்றி சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும் , நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக