தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்திற்குப்பின்னர் வடக்கில் வெடிகுண்டுகள்
வருதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை எனவும் இது இராணுவத்தின் சதி எனவும் இம்
மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர் .
கடந்த சில நாட்களாக குடாநாட்டில் மீட்கப்படும் துப்பாக்கி ரவைகள் மற்றும் குண்டுகள்
தொடர்பில் அச்சம் வெளியிட்டுள்ள மக்கள் , இத்தகைய சம்பவங்கள்
குடாநாட்டு இளைஞர்களை , முன்னாள் போராளிகளையும் மீண்டும் கைது செய்யும்
நோக்குடன் இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெறுவதாகவுவதம் தெரிவிக்கின்றனர் .
கடந்த சில நாட்களாக குடாநாட்டில் மக்கள் நடமாட்டம் அதிகளவில்
காணப்படுகின்ற இடங்களில் வெடிக்காத வெடிகுண்டுகளும் துப்பாக்கி ரவைகளும்
மீட்கப்பட்டு வருவவதுடன் இப்பிரதேசங்களில் இராணுவம் தேடுதல்களையும்
நடத்திவருகின்றது .
இதனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்படைந்துள்ளதுடன் மக்களும்
அச்சமடைந்துள்ளனர் . குறிப்பாக இன்றும் மருதனார்மடம் பகுதியில் குண்டுகள்
கண்டெடுக்கப்பட்டுள்ளன . இதேபோல் கடந்தவாரம் இப்பகுதியிலும்
சுன்னாகத்திலும் பல்கலைக்கழகச் சூழலிலும் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக
தகவல்கள் வெளியாகழயுள்ளன .
இதனால் இங்குள்ள மக்கள் மீண்டுமொரு யுத்தகால அபாயச் சூழல் உருவாக்கப்படுவதாக தெரிவிப்பதுடன் அச்சமடைந்துள்ளனர் .
தற்பொழுது மீட்கப்படும் குண்டுகள் தமிழீழ விடுதலைப் புலிகளின்
காலத்திற்குரியவை அல்ல எனத்தொரிவிக்கின்ற இம்மக்கள் , இது மீண்டும்
குடாநாட்டில் இளைஞர்களையும் முன்னாள் போராளிகளையும் கைதுசெய்யும்
நோக்குடன் இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கின்றனர் .
அரசாங்கம் தமக்கு சர்வதேச ரீதியாக அழுத்தங்கள் ஏற்படுகின்ற பொழுது
இதுபோன்ற யுக்திகளைக் கையாண்டு தமிழ் மககள் மத்தியில் பயங்கரவாதச்
செயற்பாடுகள் தற்பொழுதும் இடம்பெற்று வருவதாகக் காண்பிக்க முற்படுவதாகவும்
தமிழ் மக்களில் ஒருசாரார் கூறுகின்றனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக