விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவியான அம்பன் பொல ஆஷா விஜயந்தி பெரேரா பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கணவரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு பாதுகாப்பளிக்குமாறும் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ள ஆஷா விஜயந்தி பெரேரா, தனது கணவருக்கு எதிராக செய்யப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சர் மஹிந்தானந்தவுக்கும் அவரது மனைவி ஆஷா விஜயந்திக்கும் இடையில் விவாகரத்து வழக்கொன்று கடுவெல நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்துவருவதாகவும் சொல்லப்படுகின்றது. இவ்வருடம் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்களாக 111 அரசியல்வாதிகளுக்கு எதிரான முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே, மஹிந்தானந்தவின் மனைவியான ஆஷா விஜயந்தி பெரேரா இந்த முறைப்பாட்டினை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக