கோத்தாவின் கட்டளைக்கு அமைய ஈ. பி. டி. பியை கலைப்பது குறித்து கட்சி தலைமை ஆராய்வு ?
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை கலைப்பது குறித்து இக்கட்சியின் தலைமை மிக தீவிரமாக
ஆராய்ந்து வருகின்றது என தெரிகின்றது.
கட்சிக்கு எதிராக திட்டமிடப்பட்ட
வகையில் வெளியாட்களால் அவதூறுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற
நிலையிலும், உறுப்பினர்கள் சிலரின் நடவடிக்கைகள் கட்சிக்கு
அவப் பெயரை ஏற்படுத்தி உள்ள நிலையிலும் இத்தீர்மானம் குறித்து யோசிக்கப்படுகின்றது என தெரியவந்து உள்ளது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா இது குறித்து கட்சி முக்கியஸ்தர்கள், விசுவாசிகள் ஆகியோருடன் மந்திராலோசனைகள் நடத்தி வருகின்றார் என தெரியவருகிறது.

கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது என இவர்கள் அனைவரும்
அடிப்படையில் ஏற்றுக் கொண்டு உள்ளனர் என்றும் குறிப்பாக சமூக அக்கறை உடைய
புத்திஜீவிகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் கட்சியில் காத்திரமான
இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று இவர்களில் ஒரு சாரார் வலியுறுத்தி உள்ளனர்
என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆனாலும் கோத்தபாயவின் வற்புறுத்தலுக்கு அமையவே டக்ளஸ் இப்படி ஒரு
முடிவிற்கு வர இருப்பதாக ஈபிடிபியின் சில உறுப்பினர்கள் தெரிவித்திருப்பதாக
தெரியவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக