சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

11 டிசம்பர், 2013

வவுனியரவில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற் குட்படுத்திய இராணுவச்சிப்பாய்



வவுனியா, கலாபோகஸ்வெவ பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த 22 வயதுடைய இராணுவச்சிப்பாய் கைதுசெய்யப்பட்டுள்ளான்.  கெப்பிட்டிக்கொல்லாவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த இராணுவச்சிப்பாய் விடுமுறையிலிருந்து திரும்பிய நிலையில் தனது படை முகாமுக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுமியை பிரப்பமடு பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு
அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.  இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட காவல்துறையினர் அந்த படைவீரரை கைது செய்து வவுனியா காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.  பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ. ஜெயக்கெனடி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக