சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

11 டிசம்பர், 2013

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் மதுவுக்குத் தடை!

 
சிங்கப்பூரிலுள்ள லிட்டில் இந்தியா என்ற இடத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு நடந்த கலவரம் காரணமாக, இனி அந்த பகுதிகளில் மதுவுக்கு முழு தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியில் இந்த தடை அமலுக்கு வரும் என்று அந்நாட்டில் இரண்டாம் உள்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதே நேரத்தில், அந்த பகுதியில் எந்த நேரத்தில் மதுவை தடை செய்யலாம், எந்தெந்த பகுதிகளில் மதுவைத் தடை செய்யலாம் என்பது குறித்தும் காவல்துறையினர் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விபத்து நடந்ததால் தான் கலவரம் உருவானது என்று காரணம் கூறப்பட்டாலும், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பலர் மது அருந்தி இருந்ததால் தான் இந்த பிரச்சனை இவ்வளவு பெரிய கலவரமாக உருவெடுத்தது என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக