சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

11 டிசம்பர், 2012

அதிசய நாள் நாளை 12.12.12





நாளை தேதி, மாதம், வருடம் எல்லாம் 12ம் எண்ணில் வருகிறது.
 
12-12-12 என்ற இந்த தேதியை அதிர்ஷ்ட நாளாக பலரும் கருதுகின்றனர். எனவே இந்த நாளில் நல்ல காரியங்கள் செய்தால் அது வெற்றியடையும் என்றும் நினைக்கின்றனர். வெளிநாட்டில் நாளை திருமணம் செய்து கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்று இளைஞர்கள் நம்புகிறார்கள். எனவே பல நாடுகளிலும் நாளை ஆயிரக்கணக்கான ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
 
சிங்கப்பூர், ஹாங்ஹாங், தாய்லாந்து போன்ற நாடுகளில் நாளைய தினத்தில் திருமணம் செய்து கொள்ள மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். ஹாங்ஹாங்கில் மட்டுமே நாளை 696 பேர் திருமணம் செய்வதற்காக பதிவாளர் அலுவலகத்தில் முன் பதிவு செய்துள்ளனர். அதேபோல சிங்கப்பூரிலும் திருமணம் செய்ய விரும்பி 540 பேர் பதிவு செய்ய விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இதுதவிர சீனா, ஐரோப்பிய நாடுகளிலும் நாளை திருமணம் செய்ய பலர் முடிவு செய்துள்ளனர்.
 
மேல்நாட்டின் இந்த கலாச்சாரம் இந்தியாவிலும் பரவி வருகிறது. அதிர்ஷ்ட நாள் என்று கருதப்படும் 12-12-12 அன்று இந்திய பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். இதற்காக சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நிறைமாத கர்ப்பிணிகள் சிலர் மருத்துவர்களை அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக