இந்திய அகதி முகாம்களில் வசித்துவருகின்ற இலங்கை அகதிகளில் 1200
இற்கும் மேற்பட்டோர் கடந்த வருடம் இலங்கை திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகள்
சபையின் அகதிகளுக்கான அமைப்பு (யு.என்.எச்.சி.ஆர்) தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு முகாம்களில் வசித்து வந்தவர்களில் சுமார்
1260 பேர் கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரை
இலங்கைக்குத் திரும்பிய தாக யு.என்.எச். சி.ஆர். அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு மேலும் அறிவித்திருப்பதாவது:
இதேவேளை, 2011 ஆம் ஆண்டு ஆயிரத்து 670 அகதிகளும் 2009 ஆம் ஆண்டு 2
ஆயிரத்து 40 அகதிகளும் இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பியுள்ளனர்.
கொழும்பிலிருந்து அவர்களின் சொந்த இடங்களுக்கு செல்வதற்கான செலவை நாமே
ஏற்றுக் கொண்டுள்ளோம்.
இந்திய அகதி முகாம்களில 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள்
வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இந்தியாவில் வாழ்கின்ற அகதிகளில் 36
சதவீதமாகும் என்று மேலும் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக