.
தமது அலுவலகம் திடீரென சுற்றி வளைக்கப்பட்டு அங்கு வெடிபொருள் என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளமை அரசின் திட்ட மிட்ட சதிச்செயலாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
தமது அலுவலகம் திடீரென சுற்றி வளைக்கப்பட்டு அங்கு வெடிபொருள் என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளமை அரசின் திட்ட மிட்ட சதிச்செயலாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
கிளிநொச்சியில் அமைந்துள்ள எனது
அலுவலகத்தை 50 பேரடங்கிய குழுவொன்று திடீரென சுற்றிவளைத்தது. இவ்வாறு
சுற்றிவளைத்தவர்கள் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த ஆவணங்களைத்
துருவித் துருவி ஆராய்ந்துள்ளனர்.
சோதனை நடத்துவதற்கான நீதிமன்ற உத்தரவோ
அல்லது பொலிஸ் அனுமதியோ அவர்களிடம் இருக்கவில்லை. மாலை 3 மணி முதல் 8
மணிவரை இவ்வாறு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரை அழைத்துச் சென்று இனிப்பு உருண்டையளவில்
ஏதோவொன்றைக் காட்டி வெடிபொருள் தயாரிக்கும் மருந்து எனக் கூறியுள்ளனர்.
அதன் பின்னர் அவர்கள் கொண்டுவந்த
இறுவெட்டை போட்டுக்காட்டி ஆபாச இறுவெட்டு வைத்திருந்ததாகக் கூறி
அமைப்பாளரைக் கைதுசெய்துள்ளனர். அவர் தற்போது வவுனியாவில்
தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என அறியமுடிகின்றது.
அத்துடன், சோதனை நடவடிக்கையின்போது
சுயாதீன ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாமல் அரசு சார்பான ஊடகங்கள்
அழைத்துவரப்பட்டுள்ளன. அதேவேளை, இதற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டவர் 6
மாதங்களுக்கு முன்னர் விலகிச்சென்றுவிட்டார். எனது அலுவலகத்தில் சோதனை
நடத்தவுள்ள விவகாரம் குறித்து மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில்கூட
எனக்கு அறிவிக்கப்படவில்லை.
மேற்படி சோதனை நடவடிக்கை அரசின் திட்டமிட்ட சதிச்செயலாகும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக