செங்கல்பட்டு, பூந்த மல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடக் கோரி மே17 இயக்கத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செங்கல்பட்டு பூந்த மல்லி சிறப்பு
முகாம்களில் இருபது நாள்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருக்கும் தமிழ்
ஈழசொந்தங்களை விடுதலை செய்யக் கோரியும் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி
சிறப்பு முகாம்களை இழுத்து மூடக்கோரியும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்திற்கு
அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மே17 இயக்கத்தின் மாநில
ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, திராவிடர் விடுதலை கழகத்தின் காஞ்சி
மாவட்ட தலைவர் டேவிட் பெரியார், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைமை நிலையச்
செயலாளர் தபசி குமரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர்
வன்னியரசு, உயர்நீதிமன்ற சட்டத்தரணி அங்கயற்கண்ணி, செங்கல்பட்டு பொது
மக்கள் சார்பாக அய்யா பால்ராசு மற்றும் மே17 இயக்கத்தைச் சேர்ந்த ஹரிஹரன்,
கார்த்திக் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.
மேற்படி கண்டன ஆர்ப் பாட்டத்தில்
சிறப்பு முகாம் களில் உள்ளோருக்கு ஆதர வாகவும், கியூப் பிரிவு
பொலிஸாருக்குக் கண்டனத்தைத் தெரிவிக்கும் விதமாகவும் பதாகைகளைத் தாங்கி
நின்று தங்களது கண்டனங்களை தெரிவித்தார்கள்.
இதில் மே17 இயக்க ஆதரவாளர்களும், தோழமை
இயக்கங்களின் தொண்டர்களும் மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு
தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக