கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை
சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளினால் அந்தக் கட்சி பிளவுபடும் நிலை
ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், அந்த
கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மூன்று பேர் கட்சியில் இருந்து விலகி,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர்
தைலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன் தானும் பொதுச் செயலாளர் பதவியில்
இருந்து விலக உள்ளதாகவும் இதுகுறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச்
சந்தித்துப் பேசவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின்
அரசியல் செயற்பாடுகளை புரிந்து கொள்ள முடியாததால், கட்சிக்குள் இவ்வாறான
பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன எனவும் தைலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து
விலகிய கருணா தரப்பினரின் அரசியல் கட்சியாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்
கட்சி ஆரம்பிக்கப்பட்டது. கருணா இந்த கட்சியின் ஆரம்ப தலைவராக
செயற்பட்டார். எனினும், பின்னர், கருணா தரப்பிற்கும், பிள்ளையான்
தரப்பிற்கும் முரண்பாடுகள் ஏற்பட்டதை அடுத்து கருணா அந்த கட்சியில் இருந்து
விலகி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டதுடன் உப தலைவராகவும்
நியமிக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக