சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

22 ஜனவரி, 2013

வடக்கில் இராணுவ ஆட்சி சோ­லிசக் கட்சி குமுறுகிறது.



பொதுக்கூட்டத்தை நடத்த தடைவிதிக்கப்பட்டதன் மூலம் வடக்கில் இராணுவ ஆட்சி நிலவுகின்றது என்பது உறுதியாகியுள்ளது. இந்த நாட்டிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் தொழிலாளர்கள் வர்க்கம் ஐக்கியப்பட்டு சோஷலிச அரசு ஒன்றை அமைக்கப்போராட வேண்டும் என்று சோஷலிச சமத்துவக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர். பி.ரி. சம்பந்தன் தெரிவித்தார். 
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
எமது கட்சி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தை நடத்த மண்டப நிர்வாகத்தினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மண்டபத்துக்கு வெளியே எமது கூட்டத்தை நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.
மண்டபத்தில் நாம் கூட்டம் நடத்த 5 நாள்களுக்கு முன்பாக நாம் அனுமதி பெற்றிருந்தோம். பாதுகாப்பு அமைச்சிலிருந்து வருவதாகத் தம்மை அறிமுகப்படுத்திய இரண்டு அதிகாரிகள் வீரசிங்கம் மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். 
என்று மண்டபத்துக்கு பொறுப்பாக இருந்த ராஜாராம் என்பவர் எம்மிடம் கூறினார். பதிவு செய்த கட்சிக்கு மட்டுமே அனுமதி வழங்குவதாக ராஜாராம் தெரிவித்தார். எமது கட்சி பதிவு செய்யப்பட்டது என்பதைக் கூறிய போதும் அனுமதி வழங்கப்படவில்லை.
வடக்கில் இராணுவ ஆட்சி நடப்பதன் வெளிப்பாடாகவே இந்தத் தடையை பார்க்க வேண்டியுள்ளது. இது ஜனநாயக விரோதச் செயல். ஒரு கட்சி மட்டுமா இங்கு ஆள முடியும்? ஜனநாயக உரிமை விரும்பும் அனைவரும் இந்த அராஜகத்தை எதிர்ப்பர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக