சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

20 ஜனவரி, 2013

குர்திஸ்தான் போராளிகள் படுகொலையில் சந்தேகநபர்கள் கைது!!

 
 
 தகவல் மையத்தில் வீடியோ இனைப்பு 
 
 
 
 
பாரிஸில் உள்ள குர்திஸ்தான் தகவல் மையத்தில் வைத்து
ஜனவரி 9ம் திகதிபடுகொலை செய்யப்பட்ட மூன்று
குர்திஸ்தான் பெண்களின் படுகொலையில்சம்பந்தப்பட்டதாக
அவர்களுக்கு நெருக்கமான இருவர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.காவற்துறையினர் இச் செய்தியினை 
அறிவித்துள்ளனர். இம் மூவர் படுகொலை 
சம்பந்தப்பட்ட விபரங்களைப்  ஏற்கனவே அறிவீர்கள்.

குர்திஸ்தான் இனத்ததைச் சேர்ந்த இவர்கள் இருவரும் முறையே 39 மற்றும் 31 வயதுடையவர்கள்.துருக்கியில்
பிறந்தவர்கள்.காவற்துறையினரின் தகவலின் படி இவர்கள் இருவரும் படுகொலை செய்யப்பட்டபெண்கள் 
மூவருக்கும் நெருக்கமானவர்கள்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் கைது மிகவும் தீவிரமான தகவலின்
அடிப்படையில் நடந்ததென்றும் இது விசாரணையில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும்
தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கொல்லப்பட்ட மூன்று பெண்களில் ஒருவரின் வாகனச்சாரதி என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டஇருவரும் லாகூர்நெவ்வில்(La Courneuve - Seine-Saint-Denis).)
வசிப்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவர்கள் படுகொலையில் சம்பந்தப்பட்ட விதம் பற்றியும் இவர்கள் கைதுசெய்யப்பட்டதன் பின்னணி
பற்றியும் காவற்துறையினர் தெரிவிக்க மறுத்து விட்டனர். இப் படுகொலை விசாரணையைக் கையிலெடுத்த
பரிஸ் குற்றத் தடுப்புக்காவற்துறையினரின் சட்டவியற் காவற்துறைப் பிரிவின்  பயங்கரவாதத் தடுப்புத் துணை 
இயக்குநகரம் (sous-direction antiterroriste - Sdat) de la police judiciaire)பயங்கரவாதத் தடுப்புப் 
பிரிவினரும் (section antiteroriste - SAT) இணைந்து செய்த நடவடிக்கையின் மூலமே இவ் இருவரின் கைதும்
நடைபெற்றுள்ளது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக