இலங்கை
அமைச்சரவையில் எதிர்வரும் வாரங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த அரசாங்கம்
தீர்மானித்துள்ளது. இதன்படி, சில அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட
உள்ளன. பொதுநிர்வாகம், மின்வலு மற்றும் எரிசக்தி, பெற்றோலிய வளம் உள்ளிட்ட
சில அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இந்த அமைச்சுப்
பதவிகள் மாற்றம் தொடர்பில் அண்மைக்காலமாக செய்திகள் வெளியாகி வந்தமை
குறிப்பிடத்தக்கது. எனினும், இம்முறை நிச்சயமாக அமைச்சரவையில் மாற்றம்
செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக