மைக்ரோசாப்ட்
நிறுவனம் ஒவ்வொரு வருடமும் தொழில்நுட்ப வல்லுநர்கழுக்காக நடத்திய தேர்வில்
தமிழகத்தைச் சேர்ந்த சிறுவனொருவன் சாதனை படைத்துள்ளான். 9 வயதே ஆனா
இச்சிறுவனின் பெயர் பிரணவ் கல்யாணாகும். மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த மாதம்
12ம் தேதி நடத்திய இத்தேர்வில் பிரணவ் கல்யாணான் கலந்துகொண்டு வெற்றி
பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரையைச்
சேர்ந்த கல்யாண்குமார் என்பவர் சில வருடங்களுக்கு முன்னரே அமெரிக்காவில்
சென்றுவிட்டார். தற்பொழுது லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் வசித்துவரும் இவருக்கு
பிரணவ் என்ற 9 வயதான மகன் உள்ளார். இந்த பிரணவ் அருகிலுள்ள பள்ளியில்
படித்துவருகிறான்.
மைக்ரோசாப்ட்
நிறுவனம் நடத்திய ஏ.எஸ்.பி டாட் நெட் தேர்வில் 40 முதல் 90 கேள்விகள்
கேட்கப்படும். இந்த வகை வினாக்கள் ஒருவரின் புத்தி கூர்மை மற்றும் அறிவு
ஆகியவற்றை சோதிக்கும் வகையிலேயே இருக்கும். இத்தேர்வில் பிரணவ் அதிக
மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்தான்..
இன்ஜினியரிங்
மாணவர்களுக்கான இந்த தொழில்நுட்பத்தேர்வில், சிறுவன் பிரணவ் கலந்து கொண்டு
வெற்றி பெற்றுள்ளது அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தைச்
சேர்ந்த அனைவருக்கும் பெருமை அளிப்பதாக உள்ளது, என அவரது குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக