இலங்கைக்கு இந்தியா அனைத்து வழிகளிலும் உதவிகளை வழங்கும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.
இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் நேற்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். இதன்போதே பிரதமர் மன்மோகன் சிங்க இந்த உறுதியை வழங்கியதாக வெளிவிவகார அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்திற்கு பின்னர் இலங்கை பல்வேறு துறைகளில் அபிவிருத்தி அடைந்து வருகின்றது. எனவே இதற்கு இந்தியா முழுமையான ஆதரவினையும் வழங்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் எந்த தடைகள் வரினும் இந்தியாவில் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சியினை வழங்கப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சரிடம் இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. |
சிந்தனைத்துளிகள்....
எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !
“ஜென்னி மார்க்ஸ்”
24 ஜனவரி, 2013
இலங்கைக்கு இந்தியா எப்போதும் உதவிகளை வழங்கும்; மன்மோகன் பீரிஸிடம் உறுதியளிப்பு
(செய்தி-யாழ்தீபன்) புலம்பெயர் தமிழர்களை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக