சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

13 ஜனவரி, 2013

வவுனியாவில் பஸ் மோதி ஒருவர் சாவு .

    வவுனியாவில் ஏற்பட்ட வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.வவுனியா தமிழ் மகாவித்தியாலயாலயப்பகுதியைச் சேர்ந்த ஏ.செல்வராசா (வயது-47)என்பவரே உயிரிழந்துள்ளார்.
        
வவுனியா நகரில் இருந்து கண்டி வீதி வழியாக துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் சிந்தாமணி பிள்ளையார் கோவில் வீதி நோக்கி திரும்பிய போது அனுராத புரத்திலிருந்து வவுனியா நோக்கி வந்த பஸ் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
 
வவுனியா நகரில் பொங்கல் பொருட்களை வாங்கி கொண்டு வீடு நோக்கி சைக்கிளில் சென்றவரே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாளில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக