சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

27 ஜனவரி, 2013

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் தயக்கம் காட்டுகின்றது!

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் தயக்கம் காட்டி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ராஜதந்திரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசனின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தன், பாரளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் ஸ்ரீதரன் ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண சர்வதேச சமூகம் காத்திரமான பங்களிப்பினை வழங்க வேண்டுமென  கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தவும் அரசாங்கம் முனைப்புகாட்டத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது.
அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ, வெளியிட்ட கருத்து பொறுப்புணர்ச்சியற்ற வகையில் அமைந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெறவில்லை என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்திருந்தார்.
வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவோ அல்லது உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்தவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கைது செய்யப்பட்டவர்களில் பலர் பற்றிய எவ்வித தகவல்களும் கிடையாது எனவும், இதனை நிரூபிக்க மிக வலுவான ஆதாரங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கின் அடையாளத்தை சீர்குலைக்கும் வகையில் அரசாங்கம் புதிய குடியேற்றங்களை உருவாக்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக