தமிழீழ விடுதலைப் புலிகள்
இல்லாத நிலையில் இலங்கை தொடர்பான தனது கொள்கையை புதிய நிலைமைக்கேற்ப
இந்தியா விரைவில் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டுமெனத் தமிழ்த் தேசியக்
கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
இது தொடர்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்ததாவது:
புலிகளுக்கு எதிரான போரின் போது இந்தியா
இரகசியமாகவும் வெளிப் படையாகவும் இலங்கைக்கு ஆதரவளித்தது. போர் முடிந்த
பின், தமிழ்ச் சமுதாயத்தின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது தொடர்பாக
இந்திய தலைவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை மீறியுள்ளது.
சீனாவின் ஆதரவு கிடைப்பதனால் ஜனநாயக
நாடுகளுக்கு எதிராக நிற்கும் துணிவை இலங்கை பெற்றுள்ளது. இலங்கை அரசு
அமெரிக்காவையோ ஐரோப்பாவையோ கணக்கில் எடுப்பதில்லை. தம்மால் இந்தியாவையும்
சமாளிக்க முடியுமென அவர்கள் கூறுகின்றனர்.
சீனா தம்மோடு நிற்பதனால் ஐ.நா.வையும்
சமாளிக்க முடியுமென அவர்கள் நினைக்கின்றனர். உட்கட்டமைப்பு விருத்தி பற்றி
அவர்கள் பெரிதாகக் கூறுகின்றனர். ஆனால், வீதிகள் அமைக்கப்படுவதும் மீள்
வழங்கப்படுவதும் இராணுவ முகாம்களுக்காகவே தமிழர்கள் இவற்றால்
நன்மையடைவதில்லை.
தமிழர்கள் யாவரும் சந்தேகநபர்கள்
ஆக்கப்பட்டுள்ளனர் விடுதலைப் புலிகளோடு இருந்தவர்களுக்கு புனர்வாழ்வு
அளித்து விடுத்த பின்னர் இப்போது மீண்டும் அவர்களை கைது செய்கின்றனர்.
எங்கு பார்த்தாலும் இராணுவச் சோதனைச்சாவடிகள் காணப்படுகின்றன.
தமிழ் இளைஞர்களை அரசு துரத்திவிட
நினைக்கின்றது. தமிழர்கள் யாவரும் சந்தேக நபர்களாக்கப்பட்டுள்ளனர். இதை
நாம் கூறினால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதையும் பெரிதுபடுத்துவதாகக்
கூறுகின்றனர். வடமாகாணம் பலஸ்தீனம் போல ஆகிவிட்டது.
அது எதிரிகளிடமிருந்து பிடிபட்ட இடமாகிவிட்டது.
தமிழ்த் தலைவர்களையும் இலங்கை அரசையும்
ஒன்றுபட வைக்கும் தென்னாபிரிக்காவின் முயற்சிக்கு இலங்கை ஆதரவளிப்பது போல
நடிப்பது, சர்வதேச சமூகத்துக்குத் தாம் பிரச்சினையைத் தீர்க்க விரும்புவது
போல காட்டுவதற்கு மட்டும் தான் என நாம் நம்புகின்றோம்.
இலங்கை அரசு தமிழ்ப் பிரதிநிதிகளுடன்
மனப்பூர்வமாகப் பேசுவதில்லை என்பதே உண்மை. அவர்கள் எம்மோடு பேச
விரும்பவில்லை. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் எமது பிரச்சினைகளை
முன்வைக்கும்படி கூறுகின்றனர்.
ஆனால், இந்தக் குழு சிங்களக் கட்சிகளின்
ஆதிக்கத்தில் உள்ளது. அவர்கள் எமக்கு எதையும் தரப்போவதில்லை. நேரிடையாகக்
கூறினால் இதய சுத்தியோடு அவர்கள் பேச விரும்புவதில்லை என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக