கிழக்கு மாகாண பாடசாலைகளில் மாணவிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாடுகளின் பேரில் இதுவரை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசரா
ஊழியர்கள் என 25 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி
அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் மாணவிகள் மீதான பாலியல் சம்பவங்கள்
இடம்பெற்றுள்ளதாகவும், முறைப்பாடு பதிவு செய்யப்படாத சம்பவங்களும்
இருப்பதால் நடந்த சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எனவும்
அரமச்சர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ், முஸ்லிம் சமூகங்களிடமிருந்து இவ்வாறான முறைப்பாடுகள்
வெளிவருவதில்லை. சிங்கள சமூகத்திடமிருந்துதான் பெரும்பாலான முறைப்பாடுகள்
வந்துள்ளன.
விசாரணைகளின் முடிவில் சிலர் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள
அதேவேளை, இன்னும் சிலர் வேறு பள்ளிக்கூடங்களுக்கு இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஒருசிலர் சட்ட
நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளார்கள். ஆனால் சாட்சியங்கள் இல்லாத நிலையில்
சிலர் நிரபராதி என விடுதலையான சம்பவங்களும் உள்ளன என்றும் அமைச்சர்
குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முறைப்பாட்டாளர்களும் சாட்சிகளும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு
வழங்குவதற்கு முன்வராமையால் மாணவிகளுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகச்
செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தடைகள் காணப்படுவதாக
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக