சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

27 ஜனவரி, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது!








தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி செய்யும் உள்ளுராட்சி மன்றங்களக்கான நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வடக்கு அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த 560 மில்லியன் ரூபாவை அரசாங்கம் வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கிராம வீதிகள், கட்டிட நிர்மானம், சந்தை நிர்மானம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்காக இந்த நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.உள்ளுராட்சி அமைச்சின் ஆலோசனைக்கு அமைய நிதி ஒதுக்கீடுகள் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டதாக வட மாகாண உள்ளுராட்சி துணை ஆணையாளர் எஸ்.ஜெயஹரன் தெரிவித்துள்ளார்.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி செய்யும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மட்டுமே இவ்வாறு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டுவோம் என்ற அச்சம் காரணமாக அரசாங்கம் இவ்வாறு அபிவிருத்திப் பணிகளை முடக்குவதாக வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.ஈ.பி.டி.பி.யின் ஆட்சியின் கீழ் நிர்வாகம் செய்யும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு எவ்வித நிதி குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக