இலங்கையில் தமிழர் பகுதியில் சிங்கள மொழி கற்பிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இலங்கையின்
வடக்கு பகுதியில் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இங்குள்ள பள்ளிகளில்
சிங்கள மொழியை கற்பிக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அதற்காக ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களை ஆசிரியர்களாக நியமித்துள்ளது.
வடக்கு
மாகாண கல்வி அமைச்சகத்தின் அனுமதியுடன் பள்ளிகளில், சிங்கள மொழி
கற்பிக்கும் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள்
அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசினர். இதற்கு இலங்கை ஆசிரியர் சங்கமும்,
தமிழ் தேசிய கூட்டமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இலங்கை
பள்ளிகளில் ராணுவத்தினரை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டிய கட்டாயம் என்ன என
இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர்
கூறும்போது, பள்ளிகளையும், ராணுவ மயமாக்கும் ஒரு நடவடிக்கையாகவே இதை
கருதுவதாகவும் கூறினார்.
சிங்கள மொழியை கற்பிக்க
வேண்டிய தேவை இருந்தால் அதற்கான ஆசிரியர்களை தேர்வு செய்து உரிய நியமனம்
வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆனால் இதை இலங்கை ராணுவ செய்தி
தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வணிக சூரியா மறுத்துள்ளார்.
கிளிநொச்சி
கல்வி மாவட்டத்தில் கணிதம், அறிவியல், சிங்களம் பாடங்களை கற்பிக்கும்
ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே
இந்த பாடங்களை தமிழில் கற்பிக்க கூடிய இலங்கை ராணுவத்தினரை தேர்வு செய்து
ஆசிரியர் பயிற்சி நிறுவன உதவியுடன் கற்பித்தல் பயிற்சி வழங்கப்பட்டது.
இவர்கள்
கற்பித்தலுக்கு தயாராக உள்ளனர். எனினும் ராணுவ சீருடையில்
கற்பிக்கமாட்டார்கள். சாதாரண சீருடையில்தான் பள்ளிக்கு செல்வர். உரிய
ஆசிரியர்கள் கிடைக்கும்வரை இது தற்காலிக ஏற்பாடுதான் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக