சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

20 ஜனவரி, 2013

ரிசானா நபீக்இன் வலிமாறுமுன் மீண்டும் ஒரு வலி; கட்டாரில் சம்பவம்

இலங்கையைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவருக்கு கட்டார் நீதிமன்றம் தூக்கு தண்டணை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
வெங்கடாச்சலம் சுதேஸ்கர் என்பரே கொலைக் குற்றவாளியாக தீர்ப்பளித்து நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.

எனினும் குறித்த இந்த இளைஞனுக்கான மரண தண்டனை எதிர்வரும் 30ஆம் திகதி நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் 02ஆம் திகதி இந்திய சாரதி ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காகவே இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெங்கடாச்சலம் சுதேஸ்கர் 2010ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து கட்டாரிற்கு சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தில் கொலையான நபரிற்காக பத்தாயிரம் கட்டார் ரியாலை நஸ்டஈடாக கோரியுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் நஷ்டஈடாக கேட்கப்பட்ட தொகை இலங்கைப்பெறுமதி 70 இலட்சம் ரூபா ஆகும். இருப்பினும் இலங்கைத் தூதரகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த நஸ்டஈடு 35 இலட்சம் இலங்கை ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

ஆயினும்  மரண தண்டனை குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சவுதி அரேபியாவில் குழந்தையைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு இலங்கையைச் சேர்ந்த ரிசானா நபீக் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக