சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

20 ஜனவரி, 2013

உறுப்பிலிருந்து இலங்கையை பொதுநலவாயம் நீக்கவேண்டும்; முன்னாள் இராஜதந்திரி சேர் ரொனாலட் சன்டர்ஸ் கருத்து



news
பொதுநலவாய உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளில் இருந்து இலங்கை எதிர்மாறாக செயற்பட்டிருக்கிறது. எனவே உறுப்பு நாடுகள் பட்டியலில் இருந்து இலங்கையை இடைநிறுத்துவதற்கான சரியான நேரம் இதுதான்.
 
இவ்வாறு தெரிவித்திருக் கிறார் பொதுநலவாயத்தின் மாண்புமிக்கோர் குழு உறுப்பினராக இருந்தவரும், கரிபியன் முன்னாள் இராஜ தந்திரியுமான சேர் ரொனால்ட் சன்டர்ஸ். சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 
 
அவர் மேலும் தெரிவிக் கையில்,
பொதுநலவாய அமைப்பின் விதிமுறைகளை மீறிச் செயல்படும் தரப்பை பொது நலவாய ஒன்றியத்தின் பேரவையிலிருந்து இடை நிறுத்துவதே பொருத்தமானதாகும்.
இலங்கையில் நடை பெற்ற நீதித்துறைசார் பிரச்சினைகளை அடுத்து, அந்த நாட்டுக்கு எதிராக பொது நலவாய கூட்டு வல்லுநர்கள் இணைந்து நடவடிக்கை எடுக்கக் கூடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
 
எதிர்வரும் நவம்பரில் பொதுநலவாய உச்சி மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், குழப்பங்களை அடுத்து மாநாட்டை வேறு நாட்டுக்கு மாற்றுவது சாத்திய மற்றது. இந்த நிலைமை தற்போது பொதுநலவாயத்துக்கு பெரும் பிரச்சினை யாகவுள்ளது.
 
ஆனாலும் பொதுநல வாய அரச தலைவர்கள் மாநாட்டுக்காக இலங்கைக்குச் செல்வார்களேயானால், அது சர்வதேச சமூகத்துக்கு மாற்றுக்கருத்துக்களை அறிவிப்பதாக அமையும்.
 
குறிப்பாக மனித உரிமைகள், சட்ட ஆட்சியை மீறும் அரசுகள் எந்தவொரு தடையும் இல்லாமல் எதனையும் செய்ய முடியும் என்ற செய்தியை சர்வ தேசத்துக்கு வெளிப்படுத் துவதாகவே இது அமையும்.
 
அத்துடன் பொதுநல வாய அமைப்பானது "கோட் பாடுகளை அடியொற்றிய சங்கம்' என்ற பெயரையும் இழந்துவிடும் என்றும் சன்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக