பாதாள உலக குழுக்களை
முற்றாக ஒழிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சு விசேட வேலைத்திட்டம் ஒன்றை
ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ
தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுபதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்புகளை வழங்குவார்கள் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் பாதாள உலக குழு தொடர்பாக மக்கள் தொடர்ந்தும் தகவல்களை வழங்கினால், நாட்டுக்கு கேடாக இருக்கும் பாதாள உலக குழுக்களை அடக்குவது சிரமமான காரியமாக இருக்காது எனவும் கோத்தபாய கூறியுள்ளார்.
எனினும் நாட்டில் பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்களை கைதுசெய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த இது குறித்து தினமும் காவற்துறை நிலையங்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டு வருகிறது.
அதேவேளை பாதாள உலக குழு உறுப்பினர்களுடன் தொடர்புகளை வைத்து கொண்டு, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வரும், அரசியல்வாதிகள் அல்லது வேறு தரப்பினர் தொடர்பான தகவல்கள் கிடைத்தால், அவர்களுக்கு எதிராகவும் தகுதி தராதரமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கு பாதாளக் குழுக்கள் தடையாக இருப்பதாகவும் அவர்களை நாட்டில் இருந்து முற்றுமுழுதாக பாதாளக்குழுவினை இல்லாது செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக