சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

9 டிசம்பர், 2013

நெல்சன் மண்டேலாவின் இறுதி சடங்கு: 70 நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்


மறைந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி   நெல்சன் மண்டேலாவின் இறுதி சடங்குகள் வருகிற 15ந்தேதி ஜோகன்ஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில்  70க்கும் மேற்பட்ட நாட்டு தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என அந்நாட்டு அரசு எதிர்பார்க்கிறது.
இளவரசி டயானா, மைக்கேல் ஜாக்சன், மற்றும் போப் ஜான் பால்ஆகியோரின் இறுதி சடங்கை விட இது பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில்
அந்த நாட்டு அரசு ஈடுபட்டு உள்ளது.
இது குறித்து தென் ஆப்பிரிக்காவின்  வெளியுறவுத்துறை  செய்தி தொடர்பாளர்  கிளய்சன் மணியெலா கூறியதாவது:-
உலகம் முழுவதும் திரண்டு தென் ஆப்பிரிக்கா வருகிறது. சமீபத்திய வரலாறில் அனைத்து தலைவர்களும் கூடிய நிகழ்ச்சியாக இது இருக்கும். இறுதி சடங்கு அவரது மூததையர்களின்  வீட்டில் வைத்து நடை பெறுகிறது. நிகச்சியில் அவரது குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கலந்து கொள்ள  நாங்கள் முயற்சி செய்து வருகிறோம் எனறு அவர் கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக