சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

11 டிசம்பர், 2013

ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம் !!! டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்டு ..

ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம் என்றும், இந்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம் என்றும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த விவகாரத்தில் டெல்லி ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.
ஐகோர்ட்டு தீர்ப்பு
ஓரினச்சேர்க்கையாளர்கள் சம்மதத்துடன் அந்தரங்கத்தில் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால் குற்றம் அல்ல என்று, டெல்லி ஐகோர்ட்டு கடந்த 2009–ம் ஆண்டு பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு குறித்து நாடு தழுவிய
சர்ச்சை எழுந்தது.
டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து பல்வேறு சமூக–மத அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஓரினச்சேர்க்கை நமது நாட்டின் கலாசார, மத கோட்பாடுகளுக்கு எதிரானது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
கிரிமினல் குற்றம்
நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியயோரைக்கொண்ட சுப்ரீம் கேர்ட்டு அமர்வு இந்த வழக்கை விசாரித்து, டெல்லி ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
‘‘இந்திய தண்டனை சட்டம் 377–வது பிரிவின்படி, ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம். இந்த குற்றத்திற்கு ஆயுள்தண்டனை வரை விதிக்க அரசியல் சட்டத்தில் வகை செய்யப்பட்டு இருப்பது செல்லும்’’ என்று, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர்.                 

பாராளுமன்றத்துக்கு அதிகாரம்    
அதே நேரத்தில், சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தில் பாராளுமன்றம் விவாதித்து ஒரு முடிவை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
‘‘ இந்திய தண்டனை சட்டம் 377–வது பிரிவு இருக்கும்வரை, இது போன்ற செக்ஸ் உறவுகளை நீதிமன்றத்தால் சட்டபூர்வமாக்க முடியாது. அந்த சட்டப்பிரிவை நீக்குவதற்கு பாராளுமன்றத்துக்குத்தான் அதிகாரம் உள்ளது’’ என்றும், நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர்.
மத்திய அரசுக்கு கண்டனம்
இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதும் கோர்ட்டுக்கு வந்திருந்த ஓரினச்சேர்க்கை ஆர்வலர்களை துயரத்தில் ஆழ்த்தியது. தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்வோம் என்று அவர்கள் நிருபர்களிடம் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 15–ந்தேதி முதல், இந்த வழக்கில் நாள்தோறும் விசாரணை மேற்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு மார்ச் மாதத்தில் விசாரணையை முடித்து தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. ஓரினச்சேர்க்கை தொடர்பாக எழுந்த பிரச்சினையில் மத்திய அரசின் மெத்தனப்போக்கை விசாரணையின்போது நீதிபதிகள் கண்டித்தனர்.
‘‘பாராளுமன்றம், இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது இல்லை. அதே நேரத்தில் நீதித்துறை தங்கள் எல்லையை மீறுவதாக மட்டும் குற்றம் சாட்டுவது ஏன்?’’ என்றும், கண்டனம் தெரிவித்தனர்.
25 லட்சம் பேர்
கடந்த ஆண்டு மரணம் அடைந்த பா.ஜனதா மூத்த தலைவர் பி.பி.சிங்கால் சார்பிலும், மற்றும் பல்வேறு மத அமைப்புகள் சார்பில், டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் 25 லட்சம் பேர் இருப்பதாகவும், அவர்களில் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.                                           

வழக்கில் இதுவரை நடந்தவை:
2001:  ஓரினச் சேர்க்கை சட்டப் பூர்வமானதாக அறிவிக்க வேண்டும் என்று ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக போராடும் 'நாஸ்' தன்னார்வ அமைப்பு டெல்லி ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தது.
செப்டம்பர் 2004: டெல்லி ஐகோர்ட் 'நாஸ்' தன்னார்வ அமைப்பின் பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து மனுவை சீராய்வு செய்யக் கோரப்படுகிறது.
நவம்பர் 3, 2004: மறு சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுகிறது.
டிசம்பர் 2004 : டெல்லி ஐகோர்ட்டின்  உத்தரவை எதிர்த்து ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான 'நாஸ்' தன்னார்வ அமைப்பு சுப்ரீம் கோர்ட்டை அனுகுகிறது.
ஏப்ரல் 3, 2006: ஓரினச் சேர்க்கையாளார்களின் கோரிக்கை மனுவை ஏற்குமாறு டெல்லி ஐகோர்ட்டிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுகிறது.
அக்டோபர் 4: ஓரினச் சேர்க்கைக்கு எதிராக பாரதீய ஜனதா மூத்த தலைவர் சிங்கால் தொடர்ந்த மனுவை டெல்லி ஐகோர்ட் ஏற்கிறது.
செப்டம்பர் 18, 2008: ஓரினச் சேர்க்கையை சட்டப்பூர்வமாக்குவது குறித்து தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க மத்திய அரசு கூடுதல் அவகாசம் கேட்கிறது.
செப்டம்பர் 25: மத்திய அரசு தங்கள் அடிப்படை உரிமைகளை அத்துமீற முடியாது என ஓரினச் சேர்க்கை செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
செப்டம்பர் 26: இந்த பிரச்சனையில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகமும் இரு வேறு நிலைப்பாடுகளை தெரிவித்ததை அடுத்து டெல்லி ஐகோர்ட் மத்திய அரசிடம் விளக்கம் கேட்கிறது.
செப்டம்பர் 26: தனது கருத்தை தெரிவித்த மத்திய அரசு இதனை சட்டப்பூர்வ ஆக்குவதால் சமூக அந்தஸ்து குறையும் மேலும் ஓரினச் சேர்க்கை என்பது தவறான புத்தியின் பிரதிபலிப்பு என்று என்று கூறியது.
அக்.15, 2008: அரசின் மத ரீதியான வாதங்களை ஏற்க மறுக்கும் ஐகோர்ட் மருத்துவ ஆதாரங்களை முன்வைக்குமாறு கேட்கிறது.
ஜூலை 2, 2009: ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் விருப்பத்துடன் தனிமையில் உறவு கொள்வது குற்றமாகாது என ஐகோர்ட் தீர்ப்பளிக்கிறது.
ஜூலை 9, 2009: ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடுக்கிறார்.
மார்ச் 27, 2012: வழக்கு விசாரணை முடிந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஒத்திவைக்கிறது.
டிசம்பர் 11, 2013: இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் ஓரினச் சேர்க்கை என்பது அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்கக் கூடிய குற்றம் என்று தீர்ப்பு அளிக்கிறது. என்று செய்தி வேளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக