வெள்ளிக்கிழமை இரவு 20h30 அளவில் லாச்சப்பல் பகுதிக்கு அருகாமையில் உள்ள
Rue Philippe-de-Girard யில் இருபது பேர் கோண்ட குழுவின் தாக்குதலில்
சிறீலங்காவைச் சேர்ந்த 18 வயது இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இவர்
தலையில் வாளினால் வெட்டப்பட்டும் சுத்தியலினால் தாக்கப்பட்டும் உயிராபத்தான
நிலையில் உள்ளார் என 2வது பிராந்தியக் காவற்துறையினர் (2e district de
police judiciaire) தெரிவித்துள்ளனர்.
முதலுதவிச் சேவையினர் வந்த போது காயங்களின் கடுமையினால் இந்த இளைஞன் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். முதலுதவியின் பின்னர் Hôpital de la Pitié-Salpétrière (XIIIe)க்குக் கொண்டு செல்லப்பட்ட இவர் இன்னமும் உயிராபத்தான நிலையிலேயே உள்ளதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். காவற்துறையினரின் தகவலின் படி இது இரு சிறீலங்காக் குழுக்களிடையேயான மோதலின் கணக்குத் தீர்க்கும் சம்பவமாக நடந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக