சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

10 ஜூலை, 2013

எங்களை ஒரே குழியில் புதையுங்கள் : கள்ளக் காதலர்களின் கடைசி ஆசை

தமிழகத்தின் கோவையில் ஜோடியாக தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி, தங்களை ஒரே குழியில் புதைக்க வேண்டும் என்றும், தங்களது காதல் உண்மையானது என்றும் கடிதம் எழுதி வைத்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதிவாணன். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு நான்கு பிள்ளைகள். அதில் மூன்று மகள்களும் அடங்கும்.


இதுபோக மோசடியாக மேலும் 2 பேரைக் கல்யாணம் செய்து கைவிட்டார் மதிவாணன்.

இந்த நிலையில் முதல் திருமணத்திற்கு முன்பிருந்தே அதாவது 15 வருடமாக காதலித்து வந்த தனது காதலியான கேரளத்தைச் சேர்ந்த சரிதா என்பவருடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார் மதிவாணன்.

சரிதாவுக்கு கணவர், இரு குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் மதிவாணன் அழைத்ததால் அத்தனை பேரையும் உதறி விட்டு மதிவாணனுடன் கிளம்பி விட்டார்.

இருவரும் கோவை அருகே வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் அனிதா பொலிஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் பொலிஸார் இவர்களைத் தேடி வந்தனர்.

இருவரும் கோவை அருகே வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் அனிதா பொலிஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் பொலிஸார் இவர்களைத் தேடி வந்தனர்.

இதை அறிந்த மதிவாணன், சரிதா இருவரும் தூக்கில் தொங்கி விட்டனர். இறப்பதற்கு முன்பு இருவரும் கடிதம் எழுதி வைத்துள்ளனர். அதைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் மதிவாணன் எழுதியிருப்பதாவது....

பாளையங்கோட்டையில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் வேலை செய்து வந்தேன். நான் கல்லூரியில் படிக்கும்போது சரிதாவை சந்தித்தேன். இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தோம்.

திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். ஆனால் அதற்குள் பிரித்து விட்டனர். சரிதாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர்.

பின்னர் நான் அனிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில்தான் சரிதாவும், நானும் மீண்டும் சந்தித்துக்கொண்டோம். எங்களின் நிலைமையை பகிர்ந்து கொண்டோம். சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்து இருவரும் கோவை வந்தோம்.

கோவையில் சொந்தமாக தொழில் செய்து வந்தேன். இந்தநிலையில் உறவினர்கள் எங்களை தேட ஆரம்பித்துவிட்டனர். எங்களை வாழ விடமாட்டார்கள் என்றுதான் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று எழுதியுள்ளார் மதிவாணன்.

அதேபோல சரிதாவும் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், என்னுடைய தந்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பாளையங்கோட்டையில் டெய்லராக வேலை பார்த்தார்.

அப்போது மதிவாணனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் 2 பேரும் உண்மையாக காதலித்தோம். ஆனால் விதி எங்களை பிரித்துவிட்டது.

மனம் இல்லாமல் சோபனன் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். இருவரும் ஓமன் நாட்டில் குடியேறினாம். அங்கு எனக்கு 2 குழந்தைகள் பிறந்தனர்.

சோபனன் என்னிடம் சரியாக பேசமாட்டார். மதிவாணனுடன் வாழ்ந்திருந்தால் சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாம் என்று வருந்தினேன்.

சில நண்பர்கள் மூலம் மதிவாணனிடம் பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு எனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கடந்த மே மாதம் திருச்சூருக்கு வந்தேன். மதிவாணனும் என்னுடன் வருவதாக கூறினார்.

எங்களது காதல் உண்மையான காதல். உடல் சுகத்துக்காக வந்த காதல் இல்லை என்பதை நிரூபிக்கவே, நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம்.

எங்களை கணவன் - மனைவியாக பாவித்து ஒரே குழியில் அடக்கம் செய்யுங்கள் என்று அதில் கூறியுள்ளார் சரிதா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக